News January 9, 2025
சிவகாசி: மாநில அளவிலான வினாடி-வினா போட்டி

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, கணினி அறிவியல் துறை சார்பாக மாநில அளவில், கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி இன்று நடைபெற்றது. மென்பொருள் சந்தைபடுத்துதல், தொழில்நுட்ப பயனர் இடைமுகம், வழுநீக்கல், மின் கழிவில் பொருட்கள் வடிவமைத்தல், புதையல் வேட்டை ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 8 கல்லூரிகளைச் சேர்ந்த 171 மாணவர்கள் பங்கேற்ற போட்டியில் வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி அணி வெற்றி பெற்றது
Similar News
News January 19, 2026
விருதுநகர்: வீடு கட்ட ரூ.2.50 வரை மானியம்

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க pmay-urban.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் உங்களுடைய முகவரி, வருமானம், ஆதார் உள்ளிட்ட விவரங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். வீட்டில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகே உள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News January 19, 2026
சிவகாசி: அரிவாளால் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மம்சாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த முருகானந்தம் பேருந்தை மறித்து ஓட்டுநர் பார்த்திபனிடம் தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரசு பேருந்தின் கண்ணாடியை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் ஓட்டுநர் அளித்த புகாரில் முருகானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
News January 19, 2026
விருதுநகரில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

விருதுநகர், நரிக்குடி அருகே குறையறைவாசித்தான் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் சிறுநீரக பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது நிலையை எண்ணி விரக்தி அடைந்து சில நாட்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை.


