News January 12, 2026
சிவகாசி: பொங்கல் தொகை கேட்ட 2 பேருக்கு வெட்டு

சிவகாசி தட்டாவூரணியை சேர்ந்தவர்கள் பாலகுரு – முருகேஸ்வரி தம்பதியினர். இவர்களது முத்த மகன் சிதம்பரம் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.3000 வாங்கி அதனை தாயிடம் கொடுக்காமல் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரத்திடம் அவரது தம்பிகள் சுப்பிரமணி, அருண்குமார் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரம் தனது தம்பிகள் 2 பேரை கத்தியால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 30, 2026
விருதுநகர்: நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், ஜி.என்.பட்டி, துலுக்கப்பட்டி, பெரியவள்ளிக்குளம், முடங்கியார், சிவகாசி இ.எஸ்.ஐ, சாட்சியாபுரம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இத்துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.
News January 30, 2026
விருதுநகர்: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News January 30, 2026
விருதுநகரில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் கட்டையாபுரம் பாத்திமாநகர் பகுதியில் கடந்த நில நாட்களுக்கு முன்பு 22 பேரை தெருநாய் கடித்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மரியசூசை(74) உள்மருத்துவ பயனாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீடு திரும்பிய மூதாட்டி திடீரென உயிரிழந்தார்.


