News October 26, 2025
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு GOOD NEWS

சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.7000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது. ஆனாலும் பட்டாசு உற்பத்தி பாதிப்பால் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் வரும் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுக்கான தட்டுப்பாட்டை போக்கும் வகையில், வழக்கமாக தீபாவளி முடிந்து ஒரு மாதம் கழித்து துவங்கும் பட்டாசு உற்பத்தி பணி இந்த ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களிலேயே துவங்க உள்ளது.
Similar News
News February 3, 2026
சதுரகிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நண்பர்கள் 38 பேருடன் குழுவாக நேற்று காலை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்தார். தாணிப்பாறை அடிவாரம் வழியாக சதுரகிரி மலையேறி சென்றனர். அப்போது கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் இரட்டை லிங்கம் அருகே சென்ற போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் டோலி மூலமாக அடிவாரம் கொண்டு வரப்பட்டது.
News February 2, 2026
விருதுநகர்: கூட்டு பட்டாவை மாற்ற புதிய வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News February 2, 2026
விருதுநகர்: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க..

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


