News January 24, 2026
சிவகாசி கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து நேற்று மாணவர்கள் காலை முதல் மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிக்கு விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். (தற்கொலை தீர்வல்ல! தற்கொலை தடுப்பு எண்: 104)
Similar News
News February 2, 2026
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 221 பேர் கண்தானம்

விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு 2022-ல் 22 பேர், 2023-ல் 78 பேர், 2024-ல் 65 பேர், 2025-ல் 56 பேர் என மொத்தம் 221 பேர் கண்தானம் வழங்கியுள்ளனர். இதன் மூலம் 190 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 2026 ஜனவரியில் மட்டும் 3 பேர் கண்தானம் வழங்கியுள்ளனர். கண் தானம் அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பலரும் தொடர்ந்து பயனடைவார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News February 2, 2026
சிவகாசியில் பத்திரகாளியம்மன் கோவில் பணம் கொள்ளை

சிவகாசியில் பிரசித்திபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் அலுவலகத்தில் கிரகதுரை (63) என்பவர் நிர்வாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பக்தர்கள் வழங்கிய நன்கொடை பணம் ரூ.30 ஆயிரத்தை அலுவலக அறைக்குள் வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறை கதவு திறக்கப்பட்டு உள்ள இருந்த ரூ.30000 பணம் திருடப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News February 2, 2026
ஸ்ரீவி: குரங்கு கடித்து சிறுவன் உட்பட 4 பேர் காயம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தைப்பூசம், பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலைப்பாதையில் இரட்டைலிங்கம் அருகே சென்ற போது தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் இனியன்(4), மேல்மருத்தூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரை குரங்கு காலில் கடித்தது. இதே போல் மேலும் 2 பேர் குரங்கு தாக்கியதில் லேசான காயமடைந்தனர்.


