News August 26, 2025

சிவகாசி அருகே ராணுவ வீரர் மரணம்

image

விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் சரண் (29). இவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி காஷ்மிரில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Similar News

News August 26, 2025

மாவட்டத்தில் 1200 ஆரம்பப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் 318 மாணவர்களுக்கும், சிவகாசி மாநகராட்சி பகுதியில் 11 பள்ளிகளில் 4982 மாணவர்களுக்கும், 5 நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 101 பள்ளிகளில் 15,072 மாணவர்கள் என மொத்தம் 144 பள்ளிகளில் 23,242 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதே போல் 1200 அரசுப் பள்ளிகளில் 69,333 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.

News August 26, 2025

விருதுநகர்: ரூ.64,480 ஊதியத்தில் வேலை

image

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – ரூ.64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News August 26, 2025

விருதுநகரில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 11 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கணினி, தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!