News August 17, 2024

சிவகாசி அருகே முதியவர் வெட்டி கொலை

image

சிவகாசி அருகே எரிச்சநத்தம் -அழகாபுரி சாலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவன இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருபவர் குமிழங்குளத்தை சேர்ந்த சௌந்தரராஜன்(84). இன்று அதிகாலை மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்து அவர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இக்கொடூர சம்பவம் குறித்து, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Similar News

News May 8, 2025

அரசு கல்லூரிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் பிரிவு இளங்கலை பட்டப் படிப்புக்கு https://www.tngasa.in/ இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பிக்கலாம். திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் உள்ளன.

News May 7, 2025

விருதுநகர் : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️விருதுநகர் SP- கண்ணன் – 9940277199
▶️அருப்புக்கோட்டை DSP – மதிவண்ணன் -9894364326
▶️ராஜபாளையம் ம் DSP – ப்ரீத்தி – 9884215769
▶️சாத்தூர் DSP – நாகராஜன் – 9498784040
▶️சிவகாசி DSP – பாஸ்கர் -9840211811
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் DSP – ராஜா -8300002059
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும்)

News May 7, 2025

விருதுநகர்: வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள S.H.N எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள <>இங்கு கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!