News January 19, 2026
சிவகாசி அருகே மணல் கடத்திய இருவர் கைது

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த வெள்ளூரை சேர்ந்த கணேசமூர்த்தி(44), குருமூர்த்தி(26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணல் அள்ளும் வாகனத்தின் டிரைவர் சுருளி தப்பி ஓடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் கிராவல் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன், லாரியை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 14, 2026
சிவகாசி: தொழிலாளி தீக்குளித்து பலி

சிவகாசி அருகே பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரியப்பன்(43). குடும்ப பிரச்னையால் மனமுடைந்து, கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 14, 2026
விருதுநகர்: பைக் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி

அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தையை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் கோகுல கண்ணன்(23) உள்ளிட்ட 3 பேர் இன்று பிப்.13 ஒரே பைக்கில் சொந்த வேலையாக அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலவநத்தம் அருகே எதிரே வந்த பைக் மீது இவர்கள் சென்ற பைக் நேருக்கு நேர் மோதி கோகுல கண்ணன் & மற்றொரு பைக்கில் வந்த அருள் முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 13, 2026
விருதுநகர்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா.?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04562-252388 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.


