News August 11, 2024

சிவகாசியில் 19 வயது இளைஞர் திடீர் தற்கொலை

image

சிவகாசி பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் மாதவன்(19). இவர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், மாதவனை பெற்றோர் வேலைக்கு செல்லும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாதவன், நேற்று(ஆக.,10) நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 17, 2025

சிவகாசி: பட்டாசுகள் பறிமுதல்

image

சிவகாசி பகுதியில் பாரைபட்டி கிராமத்தில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் மிஷின் திரி தயாரிக்கப்பட்டதும், ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டதும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிவகாசி போலீசார், சஞ்சீவ்பாபு, செல்வகுமார் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டுகள் சிறை

image

ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (19). இவர் 15 வயது மாணவியிடம் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி பழகி வந்தார். சிறுமிக்கு தாலி கட்டிய சதீஷ்குமார் கடந்த 2022-ம் ஆண்டு சென்னைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சதீஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News October 17, 2025

திபாவளிக்கு வழிமுறைகளை பின்பற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

image

விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை விபத்து, ஒலி, மாசற்ற பண்டிகையாக கொண்டாடும் பொருட்டு பொதுமக்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு ஆட்சியர் சுகபுத்ரா அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலசங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!