News October 1, 2024
சிவகாசியில் மகனை கொலை செய்த தந்தை

சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வேளாண் துறை ஊழியரான ராமசாமி (74). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த தனது மகன் சுப்பிரமணியனை (34) அரிவாள்மனை மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த தந்தை ராமசாமியை திருத்தங்கல் போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 20, 2025
விருதுநகர் மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

விருதுநகர் மக்களே, தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: அருப்புக்கோட்டை:04566-240101, ராஜபாளையம்:04563-220101, சாத்தூர்:04562-264101, சிவகாசி: 04562-220101, ஸ்ரீவி.,: 04563-265101, விருதுநகர்:04562-240101 இங்கு <
News October 20, 2025
விருதுநகர்: மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயற்சி

விருதுநகர் டிசிகே பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். இவரின் கடைக்கு நேற்று காலை வந்த பட்டு ராஜா அரை பவுனில் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார். வேறு கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்து பட்டு ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
News October 20, 2025
விருதுநகரில் 61 நாட்கள் நடந்த போராட்டம் வாபஸ்

விருதுநகரில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கம், சிஐடியு ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் இணைந்து தொடர்ந்து 61 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சருடன் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 61 நாட்கள் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.