News August 17, 2025
சிவகாசியில் ஒரு வாரத்தில் 3 கொலைகள்

சிவகாசியில் அடுத்தடுத்து நடந்துள்ள 3 கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி நேருஜி நகரில் கணேஷ் பாண்டி என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 13-ம் தேதி எம்.புதுப்பட்டி பகுதியில் தர்மராஜ் (21) காட்டுப்பகுதிக்குள் கொலை செய்யப்பட்டார். 14-ம் தேதி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த சுந்தர மகாலிங்கம் கொலை செய்து கண்மாயில் புதைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News August 17, 2025
விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு..!

விருதுநகர் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
News August 17, 2025
விருதுநகரில் எங்கெல்லாம் விநாயகர் சிலை கரைக்கலாம்?

விருதுநகரில் எங்கெல்லாம் விநாயகர் சிலை கரைக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விருதுநகர் – கல்கிடங்கு
திருவில்லிபுத்தூர் – திருவண்ணாமலை கோனகிரி குளம்
அருப்புக்கோட்டை – பந்தல்குடி பெரியகண்மாய்
கிருஷ்ணன்கோவில் – இராமச்சந்திராபுரம் கண்மாய்
சிவகாசி – தெய்வாணை நகர் கிணறு
இராஜபாளையம் – வடுகவூரணி
வத்திராயிருப்பு, கூமாபட்டி – கூமாபட்டி பெரியகுளம் கண்மாய்
ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம் – ஆலங்குளம் குவாரி
News August 17, 2025
தீபாவளி பரிசை எதிர்நோக்கியுள்ள பட்டாசு நகரம்

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பட்டாசு, அச்சகத்திற்கு பெயர் பெற்ற சிவகாசியில் உள்ள தொழிலதிபர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வரி குறைப்பு முறை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.