News November 3, 2025
சிவகங்கை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

சிவகங்கை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
Similar News
News November 3, 2025
சிவகங்கை: ஊர்க்காவல் படை தேர்வு ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்ப 10.10.2025-ம் தேதி முதல் 15.10.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.2025-ம் தேதி அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், சான்றிதழ் சரிபார்ப்பும் மற்றும் உடற்தகுதித் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மேற்படி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News November 3, 2025
BREAKING: இளையான்குடியில் இரு தரப்பினர் மோதல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இளமனூரில் சாதி தலைவர்களின் பிளக்ஸ் பேனர் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில், ஒரு சமூகத்தை சேர்ந்த 5 பேருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. மோதலை தடுக்க சென்ற போலீசாரும் காயமடைந்த நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பரபரப்பு நிலவி வருகிறது.
News November 3, 2025
சிவகங்கை: வாக்காளர் கணக்கெடுப்பு பணி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 04-ஆம் தேதி முதல் டிச.4 -ஆம் தேதி வரை வாக்காளா் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. வாக்காளா் கணக்கெடுப்பின்போது, தற்போதைய நாள் வரை வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் சுய விவரங்கள் பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்கள் இரட்டைப் பிரதிகளில் வழங்கப்படவுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.


