News November 3, 2025
சிவகங்கை: Gpay, Phonepe, paytm பயன்படுத்துகிறீர்களா?

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
Similar News
News November 3, 2025
சிவகங்கை: ஊர்க்காவல் படை தேர்வு ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்ப 10.10.2025-ம் தேதி முதல் 15.10.2025 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.2025-ம் தேதி அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், சான்றிதழ் சரிபார்ப்பும் மற்றும் உடற்தகுதித் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மேற்படி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக எஸ்பி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News November 3, 2025
BREAKING: இளையான்குடியில் இரு தரப்பினர் மோதல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இளமனூரில் சாதி தலைவர்களின் பிளக்ஸ் பேனர் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில், ஒரு சமூகத்தை சேர்ந்த 5 பேருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. மோதலை தடுக்க சென்ற போலீசாரும் காயமடைந்த நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பரபரப்பு நிலவி வருகிறது.
News November 3, 2025
சிவகங்கை: வாக்காளர் கணக்கெடுப்பு பணி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 04-ஆம் தேதி முதல் டிச.4 -ஆம் தேதி வரை வாக்காளா் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. வாக்காளா் கணக்கெடுப்பின்போது, தற்போதைய நாள் வரை வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் சுய விவரங்கள் பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்கள் இரட்டைப் பிரதிகளில் வழங்கப்படவுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.


