News October 16, 2025
சிவகங்கை: G.H.ல் கேண்டீன் வைக்க விண்ணப்பிக்கலாம்

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு, குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/ தொகுப்புகள் விண்ணப்பிக்கலாம். சுய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் 22ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்குடி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு, குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகள் சிவகங்கை (ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில்,சிவகங்கை – 630562 என்ற முகவரியில் வருகின்ற 22.10.2025 விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தகவல்
News October 16, 2025
சிவகங்கை மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில் , சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் நாளை அக்டோபர் -17, (வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மழை, இடி, மின்னல் நேரத்தில் மரத்தடியில் நிற்காமலும், பெரும்பாலும் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News October 16, 2025
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், டாக்டர்.அம்பேத்கர் விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள், சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை உரிய ஆவணங்களுடன் அணுகி, வருகின்ற 28,11,2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை நேரில் சமர்ப்பித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பொற்கொடி தெரிவித்துள்ளார்.