News April 12, 2024

சிவகங்கை: 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 4, 2026

சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

image

சிவகங்கை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 4, 2026

சிவகங்கை: ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம்

image

தமிழக அரசின் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், கணவனை இழந்து வருமானமின்றி தவிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,000 முதல் ₹1,200 வரை நிதியுதவி வழங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விதவைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மற்றும் அசையா சொத்து ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

News February 4, 2026

JUST IN அஜித்குமார் கொலை வழக்கு; CBI திடுக் தகவல்.!

image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மீது, நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகார் பொய்ப் புகார் என சிபிஐ தெரிவித்துள்ளது. அவரது மரணம், காவல் மரணம் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜாமீன் கோரி கைதான காவலர்கள் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணை பிப்.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

error: Content is protected !!