News June 4, 2024
சிவகங்கை: 280 தபால் வாக்குகள் செல்லாது

சிவகங்கை மக்களவை தொகுதியில் 6 சுற்றுகள் முடிவில் கார்த்தி சிதம்பரம் 1,22,478 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில், 280 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காங்., 1139 வாக்குகளும், அதிமுகவிற்கு 243 வாக்குகளும், பாஜகவிற்கு 707 வாக்குகளும், நாதக 524 வாக்குகளும், பதிவாகியுள்ளன. நோட்டாவிற்கு 57 வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2025
பாலியல் தொல்லை: கொத்தனார் கைது

சிவகங்கை அம்மச்சிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி செந்தில்குமார் 45. செந்தில்குமார் கொத்தனார் வேலை பார்க்கிறார்.அண்மையில் அவர் கட்டட வேலை பார்த்த பகுதியில், அருகிலுள்ள வீட்டில் இருந்த 5-ம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News April 19, 2025
சிவகங்கை: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
News April 19, 2025
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி ஸ்தல வரலாறு

கார்த்திகை பெண்கள் ஆறு பேருக்கு சிவபெருமான் அஷ்டமா சித்திகளை போதிக்கும்போது, கார்த்திகை பெண்கள் திரும்பி இருந்ததால் கோபமுற்று அவர்களை பட்டமங்கலம் என்ற இந்த ஸ்தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் ஆல இலைகளால் மூடப்பட்டு கல்லாக இருக்கும் படி சபித்தார். பின்னர் சிவனே ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இவ்விடத்திற்கு வந்து அஷ்டமா சித்திகளை போதித்தார். எனவே இந்த ஸ்தலத்திற்கு அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி என்ற பெயர் வந்தது.