News May 10, 2024
சிவகங்கை 2ஆம் இடம்!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.45% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.2 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.33 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் 2ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 23, 2026
சிவகங்கை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 23, 2026
சிவகங்கை: சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் மீது குண்டாஸ்

இளையான்குடி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில் மயங்கி கிடந்தார். சிறுமியிடம் விசாரித்ததில் எதிர்வீட்டில் வசிக்கும் கார்த்திக் (36) தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நிலையில், எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பொற்கொடி, கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்
News January 23, 2026
சிவகங்கை ரயில் பயணிகளுக்கு நற்செய்தி

சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் ஜனவரி 26 முதலும், தாம்பரம் செங்கோட்டை ரயில் ஜனவரி 27 முதலும், ராமேஸ்வரம் பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஜனவரி 28 முதலும் இயக்கப்படுகின்றன. அதேபோல் மறு மார்க்கத்தில் அதே ரயில்கள் சிவகங்கை ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


