News October 14, 2025
சிவகங்கை: 15 வயது சிறுமி கர்ப்பம்-இளைஞர் மீது போக்சோ

சிவகங்கை அருகே ஒர் கிராமத்தில் வாய் பேசமுடியாத தாய், 13 வயது தம்பியுடன் 10th படிக்கும் 15 வயது சிறுமி வசிக்கிறார்.கடந்த ஆக.,15 ம் தேதி மதியம் 12:00 மணிக்கு வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது, வீட்டிற்குள் புகுந்த முருகன், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில், அச்சிறுமி 3 மாத கர்ப்பம் அடைந்தார். சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, போக்சோ வழக்கில் முருகன் மீது வழக்கு பதிந்தனர்.
Similar News
News October 14, 2025
மானாமதுரை, காரைக்குடி வழியாக மும்பை எக்ஸ்பிரஸ்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் அக்-16, 17, 18 மற்றும் 22ம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, வழியாக இயக்கப்படும். அதுபோல நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் அக்-23 மற்றும் 26ம் தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News October 14, 2025
மானாமதுரை அடையாளம் தெரியாத நபர் விபத்தில் பலி

மானாமதுரை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோயில் அருகில் நேற்று இரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் TN63BM5965 டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 14, 2025
சிவகங்கை: ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

சிவகங்கை கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 51 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th படித்தால் போதுமானது. கடைசி தேதி- நவ.9. முதலில் <