News December 14, 2025
சிவகங்கை: 1,387 வழக்குகள் முடிவுற்று ரூ.18.09 கோடிக்கு தீர்வு

சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,387 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 18.09 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News December 17, 2025
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்?

ஆ.தெக்கூர், கீழ்ச்செவல்பட்டி, திருப்பத்தூர், காளையார்கோவில், மதகுபட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக எஸ். எஸ். கோட்டை, நெற்குப்பை, இளையாத்தங்குடி, கீரணிப்பட்டி, நெடுமறம், பிள்ளையார்பட்டி, தென்கரை, புலியடிதம்பம், சருகணி, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News December 17, 2025
சிவகங்கை: ஒரே நாளில் 3 பேர் மீது குண்டாஸ்!

கிழவனுார் பகுதியை சேர்ந்த சற்குனம் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அரிராஜ், மாதவன் ஆகிய இருவரை காளையார்கோவில் போலீஸார் கைது செய்தனர். மேலும் வைரம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி கடந்த மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வேண்டுகோள் அடிப்படையில் மூவரையும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
News December 17, 2025
சிவகங்கை: பைக், கார் பெயர் மா|ற்றனுமா? இத பண்ணுங்க

சிவகங்கை மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!


