News February 10, 2026
சிவகங்கை: 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், கிருங்காக்கோட்டையை சேர்ந்த பெரியண்ணன் மகள் தர்ஷிகா (16). இவர் முட்டாக்கட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி அடிக்கடி செல்போன் பார்ப்பதை பெற்றோர்கள் கண்டித்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கம்புணரி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (12..02.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News February 12, 2026
சிவகங்கை: அக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்.!

காரைக்குடி அருகே சிறு சாக்கவயலைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜு (26). இவர் 2023 ம் ஆண்டு திருவேகம்பத்தூர் அருகே புக்குடியில் உள்ள தனது அக்காள் கவிதா வீட்டுக்குச் சென்றார். அங்கு தனது அக்காள் கணவர் ரவிச்சந்திரனிடம் மது வாங்கித் தருமாறு தகராறு செய்த நிலையில், அவரை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ராஜுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.
News February 12, 2026
சிவகங்கை SP அலுவலகத்தில் தேர்தல் தனிப்பிரிவு துவக்கம்

சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 4 எஸ்.எஸ்.ஐ.,க்கள் என 15 பேர் அடங்கிய தேர்தல் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிதல், வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.


