News December 22, 2025
சிவகங்கை: 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

சிவகங்கை மாவட்டம், மேல நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் சுந்தர பாண்டியன் மனைவி பிரியதர்ஷினி வயது 25 அவர்களுக்கு பிரசவ வலி காரணமாக இளையான்குடி ஆம்புலன்சுக்கு அழைப்பு வழங்கப்பட்டது. மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அழகான பெண் குழந்தை 108 ஆம்புலன்ஸில் பிறந்தது. பின்பு தாயும் சேயும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Similar News
News December 22, 2025
4- ஆவது நாளாக தொடரும் செவிலியர் போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கிறிஸ்டி பொன்மணி, இரஞ்சிதா, இராம்பிரியா ஆகியோர் தலைமையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நான்காவது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
News December 22, 2025
சிவகங்கை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <
News December 22, 2025
சிவகங்கையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்

செம்பனூர் புனித அந்தோணியார் சர்ச் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக ஊர் மக்கள் ஒன்றுகூடி இருந்த போது செம்பனூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம், என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அருளானந்தை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருளானந்த் கல்லல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.


