News January 19, 2026
சிவகங்கை: விவசாயி தற்கொலை செய்து கொண்ட சோகம்

பீர்க்கலைக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (46). விவசாயி மற்றும் கூலி வேலை செய்து வந்த இவர், மது போதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முருகேசனின் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது குழந்தைகள் அவரை கண்டித்ததாக கூறப்படும் நிலையில், வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 24, 2026
சிவகங்கை: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK

சிவகங்கை மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
சிவகங்கை: கல்லூரி மாணவி உயிரிழப்பு – போலீசார் விசாரணை

சருகணி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகள் ஜோஷ் நிகிதா (19). இவர் காரைக்குடி அரசு சட்டக்கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரியில் மதிய உணவு சாப்பிட்ட பின், வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
சிவகங்கை: பெண் தற்கொலை!

கல்லல் அருகே குருந்தபட்டு பகுதியை சேர்ந்த கருப்பையா – மல்லிகா (56) தம்பதியினர். இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த மல்லிகா ஜன. 22 அன்று அரளிவிதையை அரைத்து குடித்துள்ளார். அவரை மீட்டு செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கல்லல் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.


