News February 21, 2026
சிவகங்கை: விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் பலி.!

முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவவீரர் கண்ணன். இவருக்கு 12 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. விடுப்பில் ஊருக்கு வந்த அவர் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ராமலிங்கம்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற பைக்கில் மோதி கீழே விழுந்ததில் பின்னால் வந்த கார் அவர் மீது மோதி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 21, 2026
சிவகங்கை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு!

சிவகங்கை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News February 21, 2026
சிவகங்கை: மருதுசகோதரர்கள் சிலையை திறந்து வைத்த முதல்வர்

சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர், மருதுசகோதரர்கள் குறித்த காணொலிக் காட்சியினை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
News February 21, 2026
சிவகங்கை மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

சிவகங்கை மாவட்ட மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


