News October 16, 2025
சிவகங்கை: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News October 16, 2025
சிவகங்கை: G.H.ல் கேண்டீன் வைக்க விண்ணப்பிக்கலாம்

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு, குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/ தொகுப்புகள் விண்ணப்பிக்கலாம். சுய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் 22ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
சிவகங்கை: விவசாயியை தாக்கி கொலை செய்தவர் கைது

சிவகங்கை அருகே செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரன் என்பவர். நேற்று முன்தினம் இவரை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த பிரபுகுமார் மற்றும் அவரது நண்பர் ஒருவர் சேர்ந்து கூட்டுறவுபட்டி விலக்கு அருகே வைத்து தாக்கியதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்து, வழக்குப்பதிவு செய்து பிரபுகுமார் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.
News October 16, 2025
ராஜகம்பீரம் அருகே மீடியனில் மோதி கவிழ்ந்து காய்கறி லாரி

பரமக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு மினி லாரி காய்கறிகளை ஏற்றி வந்தது.மதுரை டிரைவர் அருண்குமார் ஓட்டி வந்தார். ராஜகம்பீரம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள மீடியனில் எதிர்பாராத விதமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்ததில் டிரைவர் அருண்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரியில் இருந்த காய்கறிகள் ரோட்டில் சிதறியது. மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.