News September 10, 2025
சிவகங்கை: வங்கி வேலை அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News September 11, 2025
சிவகங்கை: இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி..!

சிவகங்கையை சோ்ந்த இளைஞருக்கு இணையவழியில் வேலை தருவதாக ஒருவர் தொடர்பு கொண்டதையடுத்து, அவரது வங்கி கணக்குக்கு ரூ.8 லட்சத்து 32 ஆயிரம் செலுத்தியுள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட அவா், இளைஞருக்கான லாபத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தாா். இதுகுறித்து அந்த இளைஞா் சிவகங்கை இணையக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதுபற்றி சைபர் கிரைம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 11, 2025
சிவகங்கை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

சிவகங்கை மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<
News September 11, 2025
சிவகங்கையில் பதட்டமான பகுதிகளில் போலீஸ் பட்டாளம்

நாளை பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 2200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதட்டமான பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் மற்றும் இளையான்குடி பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு, மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.