News December 8, 2025

சிவகங்கை: ரேஷன் கடை திறந்து இருக்கா? செக் பண்ணுங்க.!

image

சிவகங்கை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..

Similar News

News March 9, 2026

BREAKING மானாமதுரை வழக்கு; இன்று மதியம் விசாரிப்பு.!

image

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இன்று மதியம் 02:30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. மானாமதுரை காவல் நிலையத்தில் மார்ச்.5 முதல் 7 ம் தேதி வரை உள்ள CCTV காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

சிவகங்கை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News March 9, 2026

BREAKING மானாமதுரை: கைதி ஆகாஷ் வழக்கில் திடீர் திருப்பம்.!

image

மானாமதுரையில் ஆகாஷ் டெலிசன் என்பவர் கைது செய்யப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், காவலர்கள் அடித்துக் கொன்று விட்டதாக புகார் கூறி உறவினர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!