News March 10, 2026

சிவகங்கை: ரூ.15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

Similar News

News April 9, 2026

சிவகங்கை: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க மக்களே..!

image

சிவகங்கை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

News April 9, 2026

சிவகங்கை: வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி

image

திருப்புவனம் அருகே வில்லியரேந்தலை சேர்ந்த பிரியங்கா மதுரையில் கோச்சிங் சென்டர் நடத்தும் இப்ராஹிம், முகமது இலியாஸ் ஆகியோரை ராமமூர்த்தி என்பவர் அறிமுகப்படுத்தினார். அவர்கள் இவரிடம் மத்திய அரசின் பணி நியமன ஆணைகளை காட்டி நம்ப வைத்து ரூ.10 லட்சம் பெற்று போலி நியமனம் செய்து பெங்களூரில் பணிபுரிய வைத்தனர். சம்பளம் வராததால் சந்தேகமடைந்த பிரியங்கா இதுகுறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

News April 9, 2026

சிவகங்கை: மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

image

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி காண்டீபன். இவரது மனைவி சாந்தி. இருவரும் குடும்பத்துடன் ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சாந்தி தனது வீட்டின் அருகே உள்ள முள்வேலியில் மாட்டை கட்ட சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!