News April 18, 2025

சிவகங்கை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

Similar News

News November 8, 2025

சிவகங்கை: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) சிவகங்கை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 8, 2025

சிவகங்கைக்கு வருகை தரும் துணை முதல்வர்!

image

சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் திருவுறுவச் சிலை திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நவ. 14, 15 ஆகிய நாட்களில் திமுக கழக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமாகிய உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கையில் மாவட்ட பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் கூட்டம் நாளை (நவ.8) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. மக்கள் இதில் கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம், பிழைத் திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவுகளிக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!