News March 2, 2026
சிவகங்கை: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி.!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவை சேர்ந்தவர் பந்தல் தொழிலாளி சரவணன் (வயது 47). இவர் தனது உறவினர் வீட்டின் மாடிக்கு சென்ற போது, மின்கம்பி உரசியதில் காயமடைந்தார். இவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
சிவகங்கை: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்; இந்த நம்பர் போதும்!

சிவகங்கை மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News March 10, 2026
சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்.!

சிவகங்கை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News March 10, 2026
JUST IN மானாமதுரை பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.!

மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் அவரது உறவினர்கள் 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. MLA மற்றும் அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் 3 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.


