News November 21, 2025
சிவகங்கை: மின்சாரம் தாக்கி விவசாயி பலி.!

இளையான்குடி அருகே முனைவென்றி கிராம விவசாயி முனியசாமி (48), வயலுக்கு தலையில் நெல் நாற்று கட்டுகளைச் சுமந்து கொண்டு வாழைத் தோப்புக்குள் சென்ற போது, தாழ்வாக தொங்கிய மின்கம்பி நாற்றுடன் உரசி மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
சிவகங்கைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
சிவகங்கை: 20 ஆண்டுகளாக போராடும் மக்கள்

காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள அரியக்குடிக்குட்பட்ட பாலாஜி நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதியின்றி மக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்து வருகின்றனர். தற்போது மாநகாராட்சியில் புகார் அளித்துள்ளனர்
சாலை அமைக்கும் திட்டம் செயல்முறையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News November 24, 2025
JUST IN சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார் என சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


