News December 20, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (19.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
சிவகங்கை: 16 வயது சிறுவனுக்கு மது பாட்டிலால் குத்து

காரைக்குடி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், செஞ்சை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் நண்பர்கள் என கூறப்படும் நிலையில், இருவரும் மது அருந்திய போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன், 16 வயது சிறுவனை அவதூறாக பேசி மது பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 21, 2025
மானாமதுரை: 6 வயது சிறுமி பள்ளியில் மயங்கி விழுந்து பலி

மானாமதுரை, சேதுபதி நகரை சேர்ந்த இளங்கோ — பவானி தம்பதியின் மகள் தேஜாஸ்ரீ, 6; தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படித்தார். நேற்று பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறுமி, ஏஞ்சல் உடை அலங்காரத்துடன் பள்ளிக்கு சென்றார். அப்போது, காலை, 9:00 மணிக்கு வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News December 21, 2025
சிவகங்கை: இரவு ரோந்து பணி காவலர்களின் தொடர்பு எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் டிசம்பர்-20 இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.


