News January 31, 2025
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் எவரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி சாலை, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575-240521 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
அரசு பேருந்து மோதியதில் முதியவர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(70). நேற்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது காரைக்குடியில் இருந்து தேனி செல்வதற்காக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 20, 2025
சிவகங்கை: டிரைவர் காலிப்பணியிடம் அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி ஏப்.30. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. <
News April 20, 2025
சிவகங்கை : அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 185 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <