News September 14, 2024

சிவகங்கை மாவட்டத்தில் பிரசவ கால பெண்கள் இறப்பு விகிதம்

image

சிவகங்கையில் உள்ள அனைத்து அரசு, தனியார் மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த பிரசவத்தில், 2024-2025ம் ஆண்டில் இதுவரை 4,787 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் பிரசவ கால பெண்களின் இறப்பு எண்ணிக்கை 4ஆக உள்ளது. அதே நேரம் 2022-2023ம் ஆண்டில் 16,667 குழந்தைகள் பிறந்ததில், 7 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். 2023-2024ம் ஆண்டில் 16,210 குழந்தைகள் பிறந்த நிலையில், 8 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர்.

Similar News

News September 16, 2025

சிவகங்கை: கடைகள் அடைப்பு மக்கள் கடும் அவதி..!

image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உயிரி மருந்து கழிவுகளை சுத்திகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினரும், சமூக நல அமைப்புகளும் இன்று (16.09.2025), செவ்வாய்கிழமை, மானாமதுரயில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதலே மானாமதுரை கடை வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

News September 16, 2025

சிவகங்கை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025

விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

சிவகங்கை: EX ராணுவ வீரர் தீக்குளிக்க முயன்ற அதிர்ச்சி..!

image

தேவகோட்டை அருகே புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமநாதன். இவர் தனது தன்னை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று புகார் கொடுத்தும் அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து, தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!