News November 9, 2025

சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் நவ.14 வரை, லேசான மழை பெய்யக்கூடும். மேலும் நவ.12 அன்று சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.

Similar News

News April 7, 2026

காரைக்குடி: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.!

image

காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் அழகு சுதாகரன் (வயது 31). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சூடாமணிபுரம் அருகே வரும்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அழகு சுதாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரைக்குடி போலீசார் விசாரணை.

News April 7, 2026

சிவகங்கை: இன்ஸ்டாகிராம் மூலம் நூதன திருட்டு

image

திருப்புவனம் வைகை வடகரை பகுதியை சேர்ந்த 25 வது இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரம் பார்த்துள்ளார். அதில் பணம் முதலீடு செய்தால் ஒரு வாரத்தில் இரண்டு மடங்காக லாபம் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியதை நம்பிய இளைஞர் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி ஏமாந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 6, 2026

சிவகங்கை : டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை பயன்படுத்தி வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கே <>க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகவும் . SHARE IT

error: Content is protected !!