News May 30, 2024

சிவகங்கை மானாமதுரையின் கடம் சிறப்பு!

image

சிவகங்கை, மானாமதுரை குலாலர் தெருவில் நான்கு தலைமுறையாக 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கலைஞர்கள் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். வைகை நதி பாய்வதால் மானாமதுரை மக்களுக்கு மண்பாண்ட தொழிலும் ஓர் அடையாளமாக விளங்குகிறது. இங்கு தயாரிக்கப்படும் கடம் உலகளவில் இசைக்கலைஞர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராம கண்மாய்களில் இருந்து மணல் எடுத்து தயாரிக்கின்றனர்.

Similar News

News February 8, 2026

சிவகங்கை: கோழிக்காக சகோதரருக்கு அரிவாள் வெட்டு

image

தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் சகோதரர்கள். இந்நிலையில், கருப்புசாமியின் கோழி பாலமுருகனின் வீட்டுக்குள் சென்றதாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் பாலமுருகன், கருப்புசாமியை அரிவாளால் தாக்கி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த புகாரின் பெயரில் பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

News February 8, 2026

சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 8, 2026

சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!