News August 2, 2024
சிவகங்கை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வருகின்ற 16.08.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55784, 94990 55785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
சிவகங்கை:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சிவகங்கையில் அக்.27 அன்று மருதுபாண்டியர் நினைவேந்தல், அக்.30 அன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் அக்.27,30 அன்று சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையாங்குடி ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் பொற்கொடி விடுமுறை அளித்துள்ளார். இதே போல் அன்று கீழடி அருங்காட்சியகத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
சிவகங்கை: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) சிவகங்கை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News October 25, 2025
மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள்

சிவகங்கை: காந்தி, ஜவகர்லால்நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நவம்- 4, 5 ஆகிய தேதிகளில் சிவகங்கை நகர், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பங்கேற்புப் படிவத்துடன், போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


