News May 16, 2024
சிவகங்கை மழை அளவு விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று(மே 15) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிங்கம்புணரியில் 14 செ.மீட்டரும், திருப்புவனம் பகுதியில் 2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கோடை தொடங்கியது முதல் ஆங்காங்கே கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 20, 2025
சிவகங்கையில் 3 இளைஞர்கர் மீது பாய்ந்த குண்டாஸ்

தாயமங்கலம் பாண்டி 28 கொலை தொடர்பாக மானாமதுரை அருகே பில்லத்தியை சேர்ந்த மணிகண்டன் 28, கைதானார். சாக்கோட்டை மற்றும் சிவகங்கை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காரைக்குடி ராஜசேகர் 34, சிவகங்கை அருகே வைரம்பட்டி வசந்தகுமார் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.
News December 20, 2025
சிவகங்கை: சிறுவன் ஓட்டிய டூ – வீலரால் பறிபோன சிறுமி உயிர்

ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகள் தன்ஷிகா 5, பாண்டிமுத்து மகள் காயத்ரி 7. இருவரும், டிச., 16ல் ரோட்டில் நடந்து சென்ற போது, அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஓட்டி வந்த டூ – வீலர் மோதியதில், சிறுமியர் இருவரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தன்ஷிகா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.இதை கண்டித்து, தன்ஷிகா உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
News December 20, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (19.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


