News September 20, 2025
சிவகங்கை மக்கள் இனிமேல் மின்சார ரயிலில் பயணம்

சிவகங்கை மாவட்டத்தின் ரயில் நிலையங்கள் வழியாக திருச்சியில் இருந்து செல்லும் ரயில் எண் 22622/226261 சேது அதிவிரைவு வண்டி உள்ளிட்ட ரயில்களும், மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்களும் 19-09 -2025 நேற்று முதல் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு மின்சார இயக்கத்தில் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News September 20, 2025
சிவகங்கை: கிராம வங்கியில் 489 காலியிடங்கள்!

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நாளைக்குள் (செப். 21) <
News September 20, 2025
காரைக்குடி டூ மைசூர் இனிமே சுலபமா போலாம்

காரைக்குடி வண்டி : 06244 காரைக்குடி – மைசூர் சிறப்பு ரயில் நாளை 21.9.2025 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது.
காரைக்குடியிலிருந்து மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு திருச்சி, நாமக்கல், பெங்களூரூ வழியாக திங்கள் காலை 7.45 மணிக்கு மைசூர் சென்றடையும். இந்த நேர அட்டவணையை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News September 20, 2025
சிவகங்கை: கடனை கட்ட முடியாமல் விரக்தியில் தீக்குளிப்பு

வடக்கு சாலைக்கிராமம் வேலு மகன் சந்திரசேகரன்36, இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சந்திரசேகர் சிவகங்கை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.75 லட்சம் கடன் பெற்று அதற்கும் கடந்த 3 மாதங்களாக தவணை கட்டாமல் இருந்துள்ளார்.வாங்கிய கடனை கட்ட முடியாத விரக்தியில் சாலைகிராமம் போலீஸ் ஸ்டேஷன் அருகே தீக்குளித்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.