News October 17, 2025

சிவகங்கை மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

image

சிவகங்கை மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.

Similar News

News October 18, 2025

சிவகங்கையில் வேகமாக பரவும் காய்ச்சல்…600 பேர் பாதிப்பு

image

சிவகங்கையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் வேகமாக பரவுவதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்கின்றனர்.தொடர்ந்து காய்ச்சல் நீடித்தால் அது ‘புளூ காய்ச்சலாக’ மாறகூட வாய்ப்புண்டு.செப்டம்பரில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைய தொடங்கின. இந்த மாதத்தில் மட்டுமே காய்ச்சலால் பாதித்து 423 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அக்., 17 வரை 175 பேர் காய்ச்சலால் பாதித்து, சிகிச்சை பெற்றுள்ளனர்.

News October 17, 2025

கண்மாயில் மீன் குத்தகை எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர், பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை 9790656919, 9384824553 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் ரோகு விற்பனை

image

சிவகங்கை மாவட்ட பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் ரோகு மற்றும் மிர்கால் மீன்விரலிகள் கையிருப்பில் உள்ளன. மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய் குத்தகையாளர்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இவற்றை வாங்கலாம். தொடர்புக்கு: மீன்வள ஆய்வாளர் – 9384824553, மீன்வள மேற்பார்வையாளர் தரம் II – 9790656919. மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல் அளித்துள்ளார்.

error: Content is protected !!