News October 14, 2025
சிவகங்கை: போலீசை கண்டித்து 4 பேர் தற்கொலை முயற்சி

சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களை தாக்கிய வழக்கில். 7க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் சூர்யா 25, சுப்பிரமணியன் 40, சுப்பிரமணியன் (என்ற) சுப்புடு ஆகியோரை போலீசார் கைது செய்தனர் அவர்களை துன்புறுத்துவதாக கூறி பாதிக்கப்பட்ட பாலமுருகன் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
Similar News
News October 14, 2025
சிவகங்கை: 15 வயது சிறுமி கர்ப்பம்-இளைஞர் மீது போக்சோ

சிவகங்கை அருகே ஒர் கிராமத்தில் வாய் பேசமுடியாத தாய், 13 வயது தம்பியுடன் 10th படிக்கும் 15 வயது சிறுமி வசிக்கிறார்.கடந்த ஆக.,15 ம் தேதி மதியம் 12:00 மணிக்கு வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது, வீட்டிற்குள் புகுந்த முருகன், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதில், அச்சிறுமி 3 மாத கர்ப்பம் அடைந்தார். சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, போக்சோ வழக்கில் முருகன் மீது வழக்கு பதிந்தனர்.
News October 14, 2025
சிவகங்கை: ரயில்வேயில் வேலை..இன்றே கடைசி

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 14, 2025
சிவகங்கையில் பல இடங்களில் மின்தடை

சிவகங்கையில் நாளை பராமரிப்புப் பணிகள் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், தெ. புதுக்கோட்டை, கீழப்பசலை, சங்கமங்கலம், குறிச்சி, முனைவென்றி, கச்சாத்தநல்லூா், நல்லாண்டிபுரம் சிங்கம்புணரி, கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, அ.காளாப்பூர், பிரான்மலை, இவைகளின் சுற்று வட்டார கிராமங்களிலும் மின்தடை ஏற்படும்.