News January 8, 2026
சிவகங்கை: பெற்றோர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைய கீழ்க்கண்ட தகுதியுள்ள சிறப்புப் பிரிவைச் சார்ந்த (SC/ST) பயனாளிகள் அருகில் உள்ள இ- சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சமூகநல அலுவலக 04575-240426 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்
Similar News
News February 7, 2026
சிவகங்கை: துணை ஜனாதிபதி வருகை.!

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 22 ம் தேதி வருகை தர உள்ளார். துணை ஜனாதிபதியுடன் வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கென 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News February 6, 2026
சிவகங்கை மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (06.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 6, 2026
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


