News January 13, 2026

சிவகங்கை: பெண் பக்தர் பலியான சம்பவம்; ஒருவர் கைது.!

image

சிவகங்கை மாவட்டம், கீழடி அருகே ஒரு குழுவினர் ஜன.9ம் தேதி பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். அப்போது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், பரமக்குடியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா (35) என்ற பெண் படுகாயமடைந்து, மதுரை G.H-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். CCTV காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை செய்ததில், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் திருப்பதி (42) என்பவரை கைது செய்துள்ளனர்.

Similar News

News January 27, 2026

மானாமதுரையில் இளைஞர் கைது..!

image

மானாமதுரை பகுதியில் தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெற்று வந்தது. இதனை தடுக்கும் வகையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு சிவகங்கை பகுதியை சேர்ந்த விஜய் (23) என்பவரை கைது செய்தனர்.

News January 27, 2026

சிவகங்கை: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 27, 2026

சிவகங்கை: மின் தடை பகுதிகள் அறிவிப்பு

image

காரைக்குடி, கோவிலூர் துணை மின் நிலையத்தில் இன்று (ஜன.27) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காரைக்குடி நகர், பேயன்பட்டி, செக்காலைக்கோட்டை, பார்நகர், கல்லுக்கட்டி, செஞ்சை, குன்றக்குடி, பாதரக்குடி, நேமம், மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, கூத்தலூர், பொய்யலூர், இலங்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

error: Content is protected !!