News April 6, 2025
சிவகங்கை: பங்குசந்தை முதலீடு ஆசை காட்டி ரூ.26 லட்சம் மோசடி

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரின் மனைவி ப்ரீத்தி. கடந்த ஜனவரி மாதம் வாட்சப்பில் ஒருவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசராக ப்ரீத்திக்கு அறிமுகமானார். அவரிடம் அறிமுகமான கீர்த்தி 10-ற்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் 26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார். பணத்தைப் பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தை தரவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை.
Similar News
News October 15, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (14.10.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.
News October 14, 2025
கராத்தே, சிலம்ப பயிற்சி நிறுவனங்களின் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி / கல்லூரி மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சிகளை வழங்குவதற்கு தகுதியான நிறுவனங்களிடமிருந்து சுய விண்ணப்பங்கள் வருகின்ற 21.10.2025 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
சிவகங்கை: வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் உள்ள மாவட்ட மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் நெறி மையத்தில் 17 -10 -2025 வெள்ளிக்கிழமை, காலை 10:30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ போன்ற கல்வி தகுதி உடைய இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.