News April 14, 2024
சிவகங்கை: நாளை பூஜ்ஜிய நிழல் நிகழ்வு

சிவகங்கை மாவட்டத்தில் ஏப்ரல் 14,15,16 ஆகிய மூன்று நாட்களில் பூஜ்ஜிய நிழல் நிகழ்வானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறித்த நேரத்தில் நடைபெற உள்ளது. சூரிய கிரகணம், சந்திரகிரகணம், சூரியனில் கருப்பு புள்ளிகள், வெள்ளி நகர்வு, பூஜ்ஜிய நிகழ்வு எனத் தொடரும் பல்வேறு வானியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அறிவியல் இயக்க கிளைச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
Similar News
News April 17, 2025
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04575–240391,2403921,காவல் -100, விபத்து -108 ,தீ தடுப்பு – 101,குழந்தைகள் பாதுகாப்பு -1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, குழந்தைத் தொழிலாளர் -55214, 1800 4252 650, ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம். *ஷேர் பண்ணுங்க
News April 16, 2025
சிவகங்கையில் ரூ.45 ஆயிரத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
News April 16, 2025
சிவகங்கை: கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சிவகங்கை மக்களே கொளுத்தும் கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காபி, டீ அடிக்கடி குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். ‘பாஸ்ட் புட்’ உணவுகளை தவிர்க்க வேண்டும். கோதுமை,மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவையெல்லாம் உடல் வெப்பத்தை உண்டாக்கி உடலுக்கு கேடு விளைவிக்கும். *SHARE !!