News December 15, 2025

சிவகங்கை: டூவீலர் விபத்தில் பரிதாப பலி

image

திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் பகுதியை சோ்ந்தவா் சத்யமூா்த்தி (29). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் சிங்கம்புணரிக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது, எஸ்.வி.மங்கலம் பகுதியில் காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News

News December 19, 2025

சிவகங்கை: நாய்களுக்கு விஷம் வைத்து கொலை?

image

செங்குளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவருக்கும், ஊத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தாஸ், மாதவன், பரஞ்ஜோதி, ஜேசு ஆகிய நான்கு பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடிவேலின் இரண்டு நாய்களை விஷம் வைத்து கொன்றதாகக் கூறி, அவர் மதகுபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதகுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 19, 2025

சிவகங்கை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 19, 2025

சிவகங்கையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!