News January 13, 2026
சிவகங்கை: சாலை விபத்தில் இளைஞர் படுகாயம்.!

திருச்சி – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், கோடிக்கோட்டை சுங்கச்சாவடி அருகே தேவகோட்டையில் இருந்து அதங்குடி பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் முகம் மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 30, 2026
சிவகங்கை: பேருந்தில் நகை திருடிய பெண்கள் கைது

கோட்டையூரை சேர்ந்தவர் கவுசல்யா. காரைக்குடிக்கு டவுன் பஸ்சில் சென்றுள்ளார். அப்போது அழகப்பா பல்கலை அருகே வந்தபோது இவருக்கு அருகில் இருபெண்கள் நின்றுள்ளனர். அதற்கு பின் அழகப்பா கல்லூரியில் இறங்கி பார்த்தபோது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கவுசல்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி, ஷாலினி இருவரையும் கைது செய்தனர்.
News January 30, 2026
சிவகங்கை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்! APPLY NOW

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<
News January 30, 2026
சிவகங்கை: பள்ளி மாணவன் மீது தாக்குதல்

தேவகோட்டை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் முன்பகை இருந்தது. இந்த பகை காரணமாக தேவகோட்டை மாந்தோப்பு வீதியில் வைத்து 4 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவனை கையை மடக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 4 மாணவர்கள் மீதும் தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு.


