News December 18, 2025
சிவகங்கை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இளையான்குடி வட்டத்தில், வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 2 நாட்களாக சமுதாயத் தலைவர்கள் புகைப்பட பலகைகள், சிமெண்ட் பீடங்களை அகற்றினர். நேற்று குமாரக்குறிச்சியில் பீடத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பரமக்குடி – இளையான்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை டிஎஸ்பி அமலஅட்வின் சமரசத்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Similar News
News December 22, 2025
சிவகங்கை: வேன், கார், பைக் அடுத்தடுத்து மோதி விபத்து

திருவாடனையை சேர்ந்த கரண் புளியடித்தம்பம் ஐயப்பன் கோவில் அருகே, மதுரையிலிருந்து தேவகோட்டை நோக்கி செல்லும் போது சமையல் ஆட்களை வேனில் ஏற்றி கொண்டு இருந்தபோது மணிமாறன் என்பவர் ஓட்டி வந்த கார் வேனின் மீது மோதியதாக கூறப்படுகிறது. வேனின் பின்னால் வந்த இருசக்கர வாகனமும் விபத்தில் சிக்கியது. இதில் ஒரு குழந்தை உட்பட 6 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
சிவகங்கை: அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

அறந்தாங்கியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(70). இவர் வஞ்சினிபட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் அறந்தாங்கிக்குச் சென்று கொண்டிருந்தார். சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது மதுரையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
சிவகங்கை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


