News September 20, 2025

சிவகங்கை: கோழியை முழுங்கி வேலியில் சிக்கிய மலைப்பாம்பு

image

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று மலைப்பாம்பு ஒன்று அங்கிருந்த கோழியை முழுங்கியது. பின்னர் வயல் வழியாக சென்றபோது அங்கு போடப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கி உயிருக்கு போராடியது.சிங்கம்புணரி தீயணைப்பு வீரர்கள் வந்து கம்பிகளை வெட்டி மலைப்பாம்பை உயிருடன் மீட்டு பிரான்மலை வனப்பகுதியில் விட்டனர்.

Similar News

News September 20, 2025

சிவகங்கை: கடனை கட்ட முடியாமல் விரக்தியில் தீக்குளிப்பு

image

வடக்கு சாலைக்கிராமம் வேலு மகன் சந்திரசேகரன்36, இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சந்திரசேகர் சிவகங்கை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2.75 லட்சம் கடன் பெற்று அதற்கும் கடந்த 3 மாதங்களாக தவணை கட்டாமல் இருந்துள்ளார்.வாங்கிய கடனை கட்ட முடியாத விரக்தியில் சாலைகிராமம் போலீஸ் ஸ்டேஷன் அருகே தீக்குளித்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 20, 2025

சிவகங்கை மக்கள் இனிமேல் மின்சார ரயிலில் பயணம்

image

சிவகங்கை மாவட்டத்தின் ரயில் நிலையங்கள் வழியாக திருச்சியில் இருந்து செல்லும் ரயில் எண் 22622/226261 சேது அதிவிரைவு வண்டி உள்ளிட்ட ரயில்களும், மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்களும் 19-09 -2025 நேற்று முதல் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு மின்சார இயக்கத்தில் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News September 20, 2025

சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!