News December 5, 2025
சிவகங்கை: கொத்தடிமையாக இருந்த குடும்பம் மீட்பு

தலக்காவயல் கிராமத்தில் கொத்தடிமை முறையில் ஒரு குடும்பம் வேலை செய்ய வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் தேவகோட்டை சார்பு ஆட்சியர், வட்டாட்சியர், ஐ.ஆர்.சி.டி.சி குழுவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், பாரதிராஜா, தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வரதராஜன், சரண்யா, அவர்களது ஒன்றரை வயது குழந்தையை கொத்தடிமைகளாக வைத்திருப்பது உறுதியானது. அந்த குடும்பம் மீட்கப்பட்டு, பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Similar News
News December 5, 2025
சிவகங்கை: சாலை விபத்தில் வாகன ஓட்டிகள் 17 பேர் பலி

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 154 சாலை விபத்துக்களில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். 791 பேர் காயம் அடைந்தனர். மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவு, அதி வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினமும் விபத்துக்கள் நடக்கின்றது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களில் இறந்தவர்களே அதிகம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
News December 5, 2025
சிவகங்கை: இனி Whatsapp மூலம் ஆதார் கார்டு!.

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
சிவகங்கை: இந்த பகுதிகளில் மின் தடை!

காரைக்குடி, நெலுமுடிக்கரை, திருப்பாச்சேத்தி, பொட்டப்பாளையம், சிங்கம்புனரி, அ.காளாப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 6) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பாரி நகர், பேயன்பட்டி, பழையூர், செல்லப்பனேந்தல், மாரநாடு, ஆவரங்காடு, புலியூர், கொந்தகை, செருதப்பட்டி, என்பீல்டு, எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.


