News September 7, 2025

சிவகங்கை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்…
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க

Similar News

News September 8, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதுவரை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட ரயில் எண் 16751 தினசரி போட் மெயில் ரயில்
செப்.11 முதல் நவ.10 வரை தாம்பரத்தில் இருந்து  மாலை 7:42 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News September 8, 2025

காரைக்குடி காவல் நிலையத்தில் ரகளை

image

காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆய்வாளர் செல்வி தலைமையிலான காவலர்கள் மனுக்களை விசாரித்தனர். அதில் குடும்ப பிரச்சினை தொடர்பாக வந்திருந்த 2 தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதை ஆய்வாளர் செல்வி, பெண் காவலர்கள் தடுக்க முயன்றனர். ஆனால், இரு தரப்பினரும் கீழே தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆய்வாளர் செல்வி அளித்த புகாரின்பேரில், இரு தரப்பிலும்13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News September 8, 2025

திருப்புவனம்: இடி தாக்கியதில் பெண் உரிரிழப்பு

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரைச் சோ்ந்தவா் சிவகாமி அம்மாள்(50). இவா், நேற்று மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அந்தப் பகுதியிலுள்ள சமையன் கோயில் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை அவிழ்ப்பதற்காகச் சென்றாா். அப்போது, இடி தாக்கியதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

error: Content is protected !!