News February 26, 2026

சிவகங்கை : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT

Similar News

News February 26, 2026

பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாத டிஎஸ்பி

image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கு தொடர்பாக டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜராகாவில்லை. இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் அவர் ஆஜராகவில்லை.

News February 26, 2026

சிவகங்கை : CMCELL மூலம் ரூ.5000 பெற சுலபமான வழி – APPLY..!

image

சிவகங்கை மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. <>இங்கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்க மனுகுறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

BREAKING சிவகங்கை: 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

image

கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக 2 தரப்பினர் இடையே 2018-ல் ஏற்பட்ட மோதலில் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்தனர். இதில் 27 பேருக்கு சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது . தண்டனையை ரத்து செய்யக்கோரி 27 பேரும் மனு தாக்கல் செய்த நிலையில் இதில் ஒருவரை விடுவித்து 26 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்.

error: Content is protected !!